Sunday, December 26, 2010

Panneer Pushpangale - Aval Appadithaan

Kodai Kaala Kaatre from Paneer Pushpangal

ராஜராஜ சோழன் நான் - Rettaivaal Kuruvi

சொர்கத்தின் வாசற்படி - Unnai Solli Kutramillai (DVD-Q)

பூங்காவியம்... - Karpoora Mullai (DVD-Q)

vedam anuvanuvuna nadam Sagarasangamam

Kamal Haasan & Shailaja in Om Namah Shivaya - Salangai Oli

'Naanoru sindhu...' from 'Sindhu Bhairavi'

Keladi Kanmani - Puthu Puthu Arthangal

Kalyana Maalai - Puthu Puthu Arthangal

Ilayaraja hits - Vella manam ulla machaan...

Oru Thanga Rathathil from Dharma Yutham

Ore Jeevan Ondre Ullam ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்

Vaan Megangale - Puthiya Vaarpugal

Jayachandran - Nilave Ennidam Nerungathe

Vedham nee Iniya naadham nee...- ILAYARAJA SUPER HIT SONG

Sreedevi En Vaazhvil

Uyirum Neeye - Pavithra

Saturday, December 18, 2010

ஆபத்தில் உதவும் செல் போன்கள்

மனித குலத்தின் ஆறாவது புலனாக மாறியிருக்கிறது செல் போன் ,ஆரம்பத்தில் பேச மட்டும் பயன் படுத்த பட்ட இவை , தன்  எல்லையை தாண்டி கை அடக்க கணினியாக மாறிவிட்டிருக்கிறது .இளசுகளின் இனிய காதலராகவே மாறியிருக்கிறது .பெற்றோர்களின் மாபெரும் வில்லனான இந்த செல் போன் மீது கதிரலை தாக்க விளைவுகளால் நிறைய உடலியல் மாற்றம் , மற்றும் நோய் ஏற்படுத்துகிறது என்கிற நிருபணங்கள் இருந்தாலும் ,இக்கட்டான சந்தர்ப்பங்களில் ஆபத்பாந்தனாக ,உற்ற தோழனாக செல் போன் சில நேரங்களில் பயன்படுகிறது என்பதையும் இங்கே நாம் பார்க்கலாம் !

 1)உதாரணமாக டவர் இல்லாத இடத்தில் ஆபத்தில் மாட்டி கொண்டீர்கள் ,வெளியுலகை தொடர்புகொண்டே ஆக வேண்டிய சூழ்நிலை , கவலையே வேண்டாம் ,உங்கள் செல் போனை எடுங்கள் 112 என்று அழுத்துங்கள் ,உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான எமெர்ஜென்சி நம்பர் அது  .கீ பேட் லாக் ஆகி இருந்தாலும் இந்த எண்னை டைப் செய்ய இயலும் , உங்கள் செல் தானாகவே அக்கம் பக்கத்திலிருக்கும் ஏதாவது ஒரு நெட் வொர்க்கை பிடித்து உங்களுக்கான எமெர்ஜென்சி இணைப்பை ஏற்படுத்திதரும்  .

2) அடுத்து கார் வச்சிருக்கிற எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப தேவையான விஷயம் , நாம அடிகடி கார் சாவியை கார் உள்ளேயே விட்டு  விட்டு அவசரமாகவோ  , ஞாபக மறதியாகவோ கார் கதவை சாத்திவிடுவோம் , பிறகு நம் பாடு அதோகதிதான் .ஒன்னு பழது பார்ப்பவரை  அழைத்து வந்து கண்ணாடியை கழட்டி சாவியை எடுக்கவேண்டும் ,அல்லது வீட்டுக்கு போய் வந்து மாற்று சாவி எடுத்து வந்துதான் ரிமோட் லாக்கை திறக்க வேண்டியிருக்கும் .இனி அந்த கவலையே வேண்டாம் ,ஞாபக மறதியா லாக் பண்ணிட்டமா ? ஒன்னும் வேண்டாம் உங்க செல் போனை எடுங்க ,வீட்டுக்கு ஒரு போன்  போடுங்க ,வீட்டில் இருக்கும் டுப்ளிகேட் கீயிலிருக்கும் அன்லாக் பட்டனை அழுத்த சொல்லுங்கள் ,உங்கள் செல் போனை டோர் பக்கத்தில் வைத்து கொள்ளுங்கள் ,பிறகென்ன நீங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் உங்கள் கார் திறந்து கொள்ளும் .

  3)சும்மா இருக்கும் போதெல்லாம் ஜம்முன்னு இருக்கும் பாட்டரி , ரொம்ப முக்கியமான தருணத்துல, அவசியமா பேச வேண்டிய நேரத்துல ஆப் ஆயிடும் , பவர் தீந்து போய்டும் ,அதுகெல்லாம்  ஒன்னும் டென்ஷனே ஆக வேண்டாம்,உங்க செல்லில் ,*3370# என்ற எண்ணை டயல் செய்யுங்க  உடனே உங்க பாட்டரியில் அய்ம்பது சதமான பவர் ஹிட்டன் பாட்டரி பவரிலிருந்து வந்து சேர்ந்திருக்கும் ,அப்புறமென்ன ,அத்தியாவசிய அழைப்பை அற்புதமாய் பேசி முடிக்கலாமே !

4)அதிக விலை கொடுத்து வாங்கும் செல் போனை பொண்டாட்டியை பாதுகாப்பது போல் பாதுகாக்க வேண்டியிருக்கிறது ,அதிலும் திருடர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்தி சென்று விடுகிறார்கள் .இப்படி செல் போன் திருட்டு  நடக்காம இருக்கணும்னா அதுக்கு ஒரே வழிதான் இருக்கு 
திருடுனவன் அந்த செல் போனை விற்க முடியாமலோ ,பயன்படுத்த முடியாமலோ செய்து விட்டால் ,எவனுமே செல் போனை திருடமாட்டான் .அதற்க்கு கீழ் கண்ட வழிமுறைகளை கடைபிடிக்கவும் *#06# என்று உங்கள் செல் போனில் டைப் செய்தால், உங்கள் போனின்  பதினைந்து இலக்க வரிசை எண் உங்கள் திரையில் தெரியும் ,அதை பத்திரமாக குறித்து வைத்து கொள்ளுங்கள் ,செல் திருடுபோனவுடனேயே உங்கள் செல் பேசி இணைப்பு வசதி தந்த நிறுவனத்திடம் நீங்கள் குறித்து வைத்திருந்த பதினைந்து இலக்க எண்ணை கூறி ,திருடுபோன தகவலையும் தெரிவியுங்கள் ,அவர்கள் அந்த செல்போனை செயலிழக்க செய்து விடுவார்கள் ,பின்பு செல் திருடன் அதை வேறு சிம் மாற்றி கூட பயன்படுத்த முடியாது ,யாரிடமும் விற்கவும் ,முடியாது இக்கட்டான சூழ் நிலையில் இனிதே உதவும் செல் போனை இனி தொல்லை பேசி என கிண்டலடிக்க மாடீர்கள்தானே?
வே.தனசேகர் 
.

  
  


ஆன் லைனில் பான் கார்ட் பதியலாம்

இந்திய வருமான வரி சட்டம் பிரிவு 139 ,A  படி வருமான வரி செலுத்தும் ஒவ்வொரு இந்தியனும் இந்த நிரந்தர கணக்கு எண் வைத்திருக்க வேண்டியது அவசியம் .அது மட்டுமல்ல நாம் வங்கி கணக்கு துவங்க , ஷேர் மார்கெட் வணிகம் செய்ய ,மியுசுவல் பண்ட் முதலீடு செய்ய என அனைத்திற்கும் அத்தியாவசியமானது இந்த பான் கார்ட் .இணைய வசதி வருவதற்கு முன்பு நாம் தரகரை அணுகினால்  முந்நூறு ,நானூறு வரை  கட்டணம் வசூலித்து வந்தனர் ,அதற்கெல்லாம் இப்பொழுது அவசியமில்லை வெறுமனே தொண்ணூற்றி நான்கு ரூபாய் நெட் பாங்கிங் மூலம் செலுத்தி  இந்த பான் கார்டை பெறலாம் இணையம் வழி .

அதற்க்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 

Wednesday, December 8, 2010

அன்புள்ள பாண்டியா !

அன்புள்ள பாண்டியா !
சற்றேறக்குறைய இருபது வருடங்களை பின்னோக்கிப்பார்க்கிறேன் , முதலில் எனக்கு அடைக்கலம் தந்த மணி ஐயாவின் சிறிய அறைக்கு உன்னை அழைத்து சென்று நான் அறிமுகப்படுத்தி பின்பு அந்த அறையில் ஓண்டிகொண்டு நாம் தொடர்ந்த பயணத்தில் , ஓவியர் சந்துருவின் அறிமுகம் ,பின்பு காலமெலாம் காதல் வாழ்க பாலுவின் அறிமுகம் ,தங்கரின் பரிந்துரையால் அகத்தியன் குருகுலத்தில் அடியெடுத்து நீ வைத்தது ஞாபகம் இருக்கிறது பாண்டியா ! நீயும் அடிக்கடி சொல்வாய் உனக்கு திறமை இருக்கிறது நீ சாதிப்பாய் என்று ,ஆனால் திறமை இருந்தும் சகிப்புத்தன்மை இன்மையால் நான் என் கல்வி சார்ந்த பணியில் சேர நேர்ந்தது ,நீயோ விடா முயற்ச்சியால் இந்த இடத்தை பிடிப்போம் என்கிற நம்பிக்கையில் பயணித்தவன் ,இது வரையிலும் சினிமா என்கிற லட்சியத்திற்க்காக, மேநாட் தெருவில் எத்தனை துயரங்களை ,அன்றாட வாழ்வின் சிரமங்களை நீ அனுபவித்திருகிறாய் என்பதை நான் அறிவேன் பாண்டியா,விகடன் இதழில் உன் திரைப்படம் பற்றிய கட்டுரையை படிக்க நேர்ந்த போது நெகிழ்ந்து போனேன் ,சும்மாவா ,இருபது வருடங்களாக உன் கால்கள் தேய்ந்த வரலாறு எனக்கு தெரியும் ,உன் மன வலி ,வறுமை ,அத்தனையும் நான் அறிவேன் ,முயற்சி திருவினையாக்கும் என்பதை நிருபித்து விட்டாய் பாண்டியா !