Wednesday, December 8, 2010

அன்புள்ள பாண்டியா !

அன்புள்ள பாண்டியா !
சற்றேறக்குறைய இருபது வருடங்களை பின்னோக்கிப்பார்க்கிறேன் , முதலில் எனக்கு அடைக்கலம் தந்த மணி ஐயாவின் சிறிய அறைக்கு உன்னை அழைத்து சென்று நான் அறிமுகப்படுத்தி பின்பு அந்த அறையில் ஓண்டிகொண்டு நாம் தொடர்ந்த பயணத்தில் , ஓவியர் சந்துருவின் அறிமுகம் ,பின்பு காலமெலாம் காதல் வாழ்க பாலுவின் அறிமுகம் ,தங்கரின் பரிந்துரையால் அகத்தியன் குருகுலத்தில் அடியெடுத்து நீ வைத்தது ஞாபகம் இருக்கிறது பாண்டியா ! நீயும் அடிக்கடி சொல்வாய் உனக்கு திறமை இருக்கிறது நீ சாதிப்பாய் என்று ,ஆனால் திறமை இருந்தும் சகிப்புத்தன்மை இன்மையால் நான் என் கல்வி சார்ந்த பணியில் சேர நேர்ந்தது ,நீயோ விடா முயற்ச்சியால் இந்த இடத்தை பிடிப்போம் என்கிற நம்பிக்கையில் பயணித்தவன் ,இது வரையிலும் சினிமா என்கிற லட்சியத்திற்க்காக, மேநாட் தெருவில் எத்தனை துயரங்களை ,அன்றாட வாழ்வின் சிரமங்களை நீ அனுபவித்திருகிறாய் என்பதை நான் அறிவேன் பாண்டியா,விகடன் இதழில் உன் திரைப்படம் பற்றிய கட்டுரையை படிக்க நேர்ந்த போது நெகிழ்ந்து போனேன் ,சும்மாவா ,இருபது வருடங்களாக உன் கால்கள் தேய்ந்த வரலாறு எனக்கு தெரியும் ,உன் மன வலி ,வறுமை ,அத்தனையும் நான் அறிவேன் ,முயற்சி திருவினையாக்கும் என்பதை நிருபித்து விட்டாய் பாண்டியா !

No comments:

Post a Comment