Wednesday, November 24, 2010

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா

"நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா "காலத்தால் அழிக்க முடியாத நிலாவை போன்று நிரந்தரமானது ,ஆறடி புல்லாங்குழலாய் ,பி.சுசிலா ,என்ன ஒரு பின்னணி இசை ,பாடல் வரிகள் ,சுசிலாவின் பாவம் ,வாணிஸ்ரீ யின் நளினம் ,இவ்வளவு ஒத்திசைவான பாடலை கேட்பது அரிது .பால் போலவே என்று எடுக்கிற  போதே ஆத்மாவை வசப்படுத்தி கொள்கிற சுசிலாவின் குரல் ,"நீ காய்கிறாய்" என்று தன்னை ஒப்பிட்டு ஏங்கி வெளிப்படுகிறது ,"இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா "என்று சிணுங்கி வருகிற குரல் நம்மை ஏங்க வைக்கிறது .
தமிழே தற்கொலை செய்து கொள்கிற அளவுக்கு பாடும் இப்பொழுதைய பாடகர்களுக்கு மத்தயில் ,எவ்வளவு அருமையாக தமிழை உச்சரித்து ,ஏங்கி ,தாலாட்டி ,ஊடல் கொண்டு என தமிழை இசைப்படித்தி நம் காதுகளின் வழி மோன நிலைக்கு கொண்டு சொல்கிறது இந்த பாடல் .இதில் வரும்" மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன் " என்கிற வரிகளில் பாவனையால் வாணிஸ்ரீ க்கும் பாவத்தால் இசை அரசிக்கும் நடக்கிற போட்டி அருமையோ !அருமை ! ,என் கால்கள் என்ற வார்த்தையை ஒரு ஏக்கத்தோடு எடுதிருப்பாரே இசை அரசி அதில் சிக்குண்டு சிதறாத மனமே இருக்க முடியாது . 

No comments:

Post a Comment