Monday, November 22, 2010

"இந்தியர்கள் ஏழைகள் ,இந்தியா ஏழை நாடல்ல"

"இந்தியர்கள் ஏழைகள்  ,இந்தியா ஏழை நாடல்ல" ,இப்படி நான் சொல்லவில்லை ,சுவிஸ் வங்கியின் இயக்குனர் சொல்வது .நம்மை சுரண்டி ,ஏமாற்றி ,வரி ஏய்ப்பு செய்த பணத்தை எல்லாம் ,கபட நாடகமாடும் தானைத்தலைவர்களும்,நாளைய முதல்வர்களும் ,நேற்றைய மந்திரிகளும் சுவிஸ் வங்கியில் பதுக்கி இருப்பது நூறு, இருநூறு , அல்ல இரு நூற்றி எண்பது லட்சம்  கோடிகள்,இதை மட்டும் மனது வைத்து நமது அரசு மீட்டு வந்துவிட்டால் ,முப்பது வருடத்திற்கு வரியில்லா பட்ஜெட் போடலாம் ஓட்டு மொத்த இந்தியாவுக்கே ,அறுபது கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம் ,இந்தியாவின் எந்த குக்கிராமத்திலிருந்தும் ,டெல்லிக்கு ,நான்கு வழி சாலைகள் அமைக்கலாம் ,ஐநூறு சமுக நல திட்டங்களுக்கான இலவச மின்சாரம் வழங்கலாம் ,நம்ம எல்லாருக்கும் ,லண்டன்ல வழங்குகிற மாதிரி மாசம் இரண்டாயிரம் வீதம் அறுபது வருஷத்திற்கு பென்ஷன் வழங்கலாம் ,உலக வங்கி அவன் இவன்னு எவன்கிடையும் கடனே வாங்காம இருக்கலாம் ,இத்தனை சலுகையையும் நம்மகிட்டருந்து பறிச்சிக்கிட்ட ,பணத்தை பதுக்கிகிட்ட அரசியல் வாதிகளை சும்மா விடலாமா ? சுவிஸ் பண மீட்ப்பு இயக்கத்தில் சேருங்கள் 

No comments:

Post a Comment