Wednesday, November 3, 2010

தவிர்க்கலாமே விபத்தை




 மக்கள் பெருக்கத்திற்கு இணையாக வாகன பெருக்கம் ,பெருகி வருகிறது ,போதுமான சாலை வசதி இல்லாததால் ,நடப்பவர்கள் படும் அவதி கொஞ்ச நஞ்சமல்ல ! வாகன ஓட்டிகளில் இரு சக்கர வாகன ஓட்டிகள் , ஆட்டோ ஓட்டுனர்கள் ,வணிக ரீதியான வாகனங்கள் இவை அனைத்தும் பிறரை தான் முந்தி செல்லவேண்டும் என்கிற நோக்கத்தில் தொடர்ந்து ஹாரன் அடித்து ஒலி மாசு ஏற்படுத்துவதோடு இல்லாமல் ,மற்ற வாகன ஓட்டிகளை முகம் சுளிக்க வைக்கின்றனர் .இயல்பாக தயாரிப்பாளர் வழங்கும் ஓலி பெருக்கியை கழட்டி எரிந்து விட்டு அதி பயங்கர சத்தம் எழுபுக்கிற ஹாரனை பொருத்தி துன்புருத்துகின்றனர்.அரசு அவசியம், அந்த ஓலிமாசு/ஒளிமாசு ஏற்படுத்துகிற ஹாரன் /லைட், தயாரிப்பாளர்களை தடை செய்யவேண்டும் .இரவில் டிம் /ப்ரைட் செய்யாத அதி முகப்பு வெளிச்சத்தால் எத்தனை விபத்துக்கள் நடக்கிறது தெரியுமா ?  எய்ட்ஸில் இறப்பவரை விட ,விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கையே இங்கு அதிகம் .காரணம் லைசென்ஸ் வழுங்குகிற முறையில் உள்ள அலட்சியம்தான் .எல் .எம் .வீ  உள்ளவர் வணிக வண்டிகளை ஓட்ட பாச் போடும் பொது வெறுமனே பீஸ் கட்ட சொல்லி வழங்கி விடுகிறது .இது எத்தனை கேலிக்குரியது .இன்று வாகனம் ஓட்டுவது நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது .அரசு பள்ளி பாட திட்டத்திலேயே மோட்டார் வாகன விதிகள் குறித்து ஒரு பாட முறையை அறிமுகபடுத்தலாம் .மேலும் எட்டு போட சொல்லி உரிமம் வழங்குவதை விட .மோட்டார் வாகன விதி முறைகள் குறித்த தேர்வு நடத்தி ,கடுமையான சோதனைகளுக்கு பிறகு உரிமம் வழங்குவது ,அவபோது ஓட்டுனர்களுக்கு போதுமான அறிவூட்டல் செய்வது மூலம், பெருமளவில் விபத்தை தவிர்க்கலாம் . மேலும் இரு கை தட்டினால்தான் ஓசை வரும் என்பது போல் ,நடப்பவரும் சரி ,வாகன ஓட்டிகளும் சரி , சம விகததில் பொறுப்புணர்வுடன் செயல் பட்டாலே விபத்தே நடக்க வாய்பிருக்காது .? 

No comments:

Post a Comment